கார்குல திருமண நிகழ்வு முறை – திருநெல்வேலி
நிச்சயதாம்பூலம்
மாப்பிள்ளைக்கும் பெண்ணிற்கும் திருமணத்தை நடத்துவதில்
முதலில் செய்ய வேண்டிய வேலை நிச்சயதாம்பூலம். மாப்பிள்ளை வீட்டார் சேகரிக்க வேண்டிய மங்கலப்பொருட்கள் விபரம்:
1.
முட்டாமஞ்சள்.
2.
வெற்றிலை கட்டு.
3. பாக்கு
4. வாசனை சந்தனம்
- குங்குமம் சிறிய பாக்கெட்
- விபூதி சிறிய பாக்கெட்
- பன்னீர் சிறிய பாட்டில்
- பத்திக்கட்டு எண்ணம்
- கட்டி சூடம்
- சாம்பிராணி
- மஞ்சள் தடவிய தேங்காய் எண்ணம்
- பழவகைகள் மூன்று வகை (வாழைப்பழம், ஆரஞ்சு, ஆப்பில்,
அல்லது எலுமிச்சம் பழம், மாம்பழம் )
- மல்லிகை அல்லது பிச்சி பூ கழுத்து ஆரம்
- விளக்கு ஆரம்
- சரப்பந்து ஆயுரம் பூக்களுக்கு குறையாமல் மல்லி (அ)
பிச்சி
- வாழைப்பழம் குலை
- இனிப்பு வகைகள் மூன்று
- தாம்பாளம்
- பன்னீர்செம்பு, சந்தனகும்பா
மேலே குறிப்பிட்ட பொருட்களை மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டிற்கு கொண்டு
செல்ல வேண்டும். பெண் வீட்டார் மேலே குறிப்பிட்ட பொருட்களில் 1 முதல் 13 வரையும்,
14 ல் கண்ட விளக்கு ஆரம் 2 (பெண் வீட்டில் வைக்கும் இரண்டு விளக்குகளுக்கும்
போட) ஆகிவைகளை தயாராக வைக்க வேண்டும். பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாருக்கு
இனிப்பு வகை கொடுக்க வேண்டியதில்லை.
மேற்குறிப்பிட்ட வரிசை எண் 1 முதல் 15 வரை உள்ள பொருட்களை ஒரு தாம்பாளத்திலும், 17 வது வரிசை எண்ணில் குறிப்பிட்டுள்ள
மூன்று வகை இனிப்புகளில் ஒவ்வொரு வகை இனிப்பையும் தனித்தனியாக மூன்று
தம்பாளங்களிலும் வைக்க வேண்டும். 4 தாம்பாளங்கள் மற்றும் ஒரு வாழைக்குலையும் சேர்த்து 5
வகையாக அமைகிறது. பெண் வீட்டில் வைத்துள்ள இரண்டு விளக்குகளில்
ஒரு விளக்கிற்கு மாப்பிள்ளை வீட்டார் கொணர்ந்த ஆரத்தை போட
வேண்டும்.
பெண்வீட்டில் கிழக்கு முகமாக இரட்டை வாழை இலைகள் விரித்து வைத்து, அவற்றின் மேல் குத்து விளக்குகள் இரண்டு, பசுஞ்சாணி
பிள்ளையார் இரட்டைப் பிள்ளையாராக பிடித்தது, நிறைநெல்நாழி
முதலியவற்றை வைத்தல் வேண்டும். மேலும் இலையில் வெற்றிலை,
பாக்கு, ஒரு சீப்பு வாழைப்பழம், உடைத்த தேங்காய் மூடிகள், அச்சு வெல்லம் இவற்றை வைக்க
வேண்டும். இரு விளக்குகளுக்கும் தலா ஒரு மாலை வீதம் பெண் வீட்டாரது மாலைகளை போட
வேண்டும்.
இருவீட்டார் தாம்பளங்களையும், வாழைக் குலையுனையும் விளக்குகளின்
முன்பாக வைத்து விளக்குகளை ஏற்றி பெண் வீட்டைச் சார்ந்த மூத்த சுமங்கலி, பூஜை (நீரினால்
சுற்றி கற்பூரம் ஏற்றி செய்ய வேண்டும்.
பிறகு மாபிள்ளையின் தகப்பனாரை கிழக்கு முகமாக (திருவிளக்கு முன்னால்) அமரச்செய்து,
அவருக்கு பெண்ணின் தகப்பனார் பன்னீர் தெளித்து சந்தனம், குங்குமம் கொடுத்து மரியாதை
செய்தபின் பெண் வீட்டாரின் தாம்பூலம் முதலியவை வைத்துள்ள தாம்பாளத்தை மாப்பிள்ளையின்
தகப்பனாரிடம் கொடுக்க வேண்டும். பின்னர் மாப்பிளையின் தகப்பனார், பெண்ணின் தந்தைக்கு
பன்னீர் தெளித்து சந்தனம் குங்குமம் கொடுத்து மரியாதை செய்து மாப்பிள்ளை வீட்டின் தாம்பூலத்
தாம்பாளத்தை கொடுக்க வேண்டும். இவ்வாறு தாம்பாளம் மாற்றியபின் திருமணநாள் மாப்பிள்ளைஅழைப்புநாள், திருமாங்கல்யத்திற்கு பொன்னுருக்கிவிடுதல்,
கொட்டகைக்கால் நாட்டல், மறுவீடு அழைப்பு போன்ற விபரங்கள் அடங்கிய முகூர்த்தப் பட்டோலையை
(ஏற்கனவே பெண் வீட்டாரால் தயாரிக்கப்பட்டவை) எல்லோர் முன்னிலையிலும் வாசிக்க வேண்டும்.
அடுத்த பெண்ணை திருவிளக்குமுன் அமரச் செய்து மாப்பிள்ளை வீட்டார் கொடுத்த
தாம்பாளத்தை பெண்ணின் முன்னே வைக்க வேண்டும். பிறகு மாப்பிள்ளையின் உடன் பிறந்த
சகோதரி, மேலே குறிப்பிட்ட தாம்பாளத்திலிருந்து இரண்டு மாலைகளையும் எடுத்து பெண்ணிற்கு
அணிவிக்க வேண்டும். பன்னீர் தெளித்து சந்தனம் குங்குமம் கொடுத்து தலையில் பூச்சூடி
(சரப்பந்திலுள்ள பூ) பெருமை செய்து பாலும் பழமும் பெண்ணிற்கு அருந்த கொடுக்க வேண்டும்.
வந்திருக்கும் பெரியோர்கள் பெண்ணை விபூதி பூசி ஆசிர்வதிக்க வேண்டும்.
வந்துள்ளவர்களுக்கு பன்னீர் தெளித்து சந்தனம் குங்குமம் கொடுத்து மரியாதை செய்ய வேண்டும்.
எடுத்து செல்ல வேண்டிய சாமான்கள்:
1 . முட்டா மஞ்சள்
2 . வாசனை சந்தனம்
3 . ரோஜா பாக்கு
4 . குங்குமம் சிறிய பாக்கெட்
5 . விபூதி சிறிய பாக்கெட்
6 . மஞ்சள் தடவிய தேங்காய்கள்
7 . பழம் (9 அல்லது 11 ) 1 சீப் ஆப்பிள் 3 , ஆரஞ்சு 3 ,
8 . வெற்றிலை
9 . பூ (ஆரம் -2 , மல்லிகை சரம் 2 பந்து )
10 . விடலை போட தேங்காய்
11 . பன்னீர் செம்பு
12 . சந்தன கும்பா
13 . பெரிய தாம்பாளம்
14 . சுருள் கவர்
மேற்கண்ட பொருட்களுடன் பெண் வீட்டார் 2 பேர்கள் (மைத்துனர் மற்றும் பெண்ணின்
தாய்மாமா) மாப்பிள்ளை அழைக்க செல்ல வேண்டும்.
மாப்பிள்ளை வீட்டில் மேற்கண்ட சாமான்களை தாம்பாளத்தில் வைத்து விளக்கு
முன்பு வைக்க வேண்டும். மாப்பிள்ளை அழைக்க வந்தவர்களுக்கு மாப்பிள்ளை தோழர் உடன்
விருந்து கொடுக்க வேண்டும். பின்பு விளக்கு ஏற்றி மாப்பிள்ளை வீட்டைச் சேர்ந்த
மூத்த சுமங்கலி விளக்கு பூஜை செய்து, அதன்பின் மாபிள்ளைக்கு பன்னீர்,சந்தனம் கொடுத்து மாலை அணிவித்து சுருள்வைத்து தாம்பாளத்தை மாப்பிள்ளையிடம் கொடுத்து பெரியோர்களிடம் ஆசி பெற்று மாப்பிள்ளை அழைத்து வர
வேண்டும்.
திருமணம் மாப்பிள்ளை வீட்டில் இருந்தால் மாப்பிள்ளை வீட்டார் மேற்கண்ட
பொருட்களுடன் பெண் வீடு சென்று பெண் அழைக்க வேண்டும், (பெண் 1 ஆண் 1 செல்ல வேண்டும்.)
கார்காத்தார் சமூக திருமண சடங்கு செய்யும் விபரங்களின் சுருக்கம்
மணமேடையின் முன்பு 2 இலை போட்டு, 2 விளக்குகள், இரட்டை
பிள்ளையார், நிறைநாளி, வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், வெல்லம் இவையாவும் வைக்க
வேண்டும்.
யானை குதிரை பானைகள், ஆயிரத்தெட்டு பெருந்திரி, இடுகின்ற
விளக்கு, அம்மி, அரசானைக்கால், முளைப்பாலிகை, மண் கிண்ணங்கள், முக்காலி முதலியவைகள் தயார் செய்து
வைக்க வேண்டும்.
மாப்பிள்ளை கிரியைகள் :
மணமேடையின் முன் மாப்பிள்ளையை கிழக்கு நோக்கி உட்கார
வைத்து அடுத்து மாப்பிள்ளையின் வட பக்கத்தில் தந்தையை
உட்கார வைத்து பக்கவாட்டில் தாயார் நிற்க வேண்டும்.
திருமண காரியங்களை நடத்துகின்ற குருக்கள் அல்லது ஐயர் மந்திரங்களை
சொல்லை மாப்பிளையின் தந்தை விநாயகர் பூஜை செய்து பஞ்ச கவ்வியம் வாங்கி அருந்தி புனிதப்
படுத்தி கொள்வார்கள். மாப்பிள்ளையும் விநாயகரை வணங்கி தாய், தந்தையிடம்
ஆசி பெற்றபின் மண மேடையின் தென் மேற்கு கன்னி மூலைக் காலில் தகப்பனாரும் தாயாரும் உடனிருந்து
நாட்காலை மாப்பிள்ளை தனது கையினால் கட்ட வேண்டும். இதன் பின்பு காப்புகட்டுதல்.
(மாப்பிள்ளைக்கு வலது கையில் காப்பு கட்ட வேண்டும்.)
முளைப்பாலிகையிடுதல்:
தண்ணீரில் ஊற வைத்த நவதானியங்களை பாலிகை கிண்ணத்தில் (மண்ணால் செய்ததது)
பெண்கள் இட வேண்டும். மாப்பிள்ளை வீட்டைச் சார்ந்த பெண்கள் (ஒற்றைப்படை எண்ணில்
அதாவது 5 , 7 , 9,11 என்றவகையில்) வந்து தான்யமாகிய முளை வந்த விதைகளை ஒவ்வொரு வரும் மூன்று முறை பன்னிரண்டு முளைப்பாலிகை
கிண்ணங்களில் இடவேண்டும். பாலிகை இட்ட பெண்களுக்கு சந்தனம்,
குங்குமம், பூ, தாம்பூலம், பழம் கொடுத்து பெருமைப்படுத்த வேண்டும்.
அடுத்து மாப்பிள்ளைக்கு
முகூர்த்த வேஷ்டி சட்டை அங்கவஸ்த்திரம் யாவும் குருக்களினால் மஞ்சள் தடவி
கொடுக்கப்பட வேண்டும்.
மணப்பெண்ணின் கிரியைகள்
மாப்பிள்ளைக்கு செய்தது போல பெண்ணின் தந்தை பிள்ளையார் பூஜை செய்தபின்
மணப்பெண் தாய் தந்தையிடம் ஆசிபெற்று காப்பு கட்டுதல் செய்ய வேண்டும், (மணப்பெண்ணிற்கு
இடது கையில் காப்பு கட்ட வேண்டும்.
முளைப்பாலிகையிடுதல் : பெண் வீட்டைச் சார்ந்த பெண்கள் ஒற்றைப்படை எண்ணிக்கையில்
(அதாவது 5 , 7 , 9 , 11 ) என்ற வகையில் வந்து ஒவொருவரும் 3 தடவைகள் முளைப்பாலிகை இட
வேண்டும். முளைப்பாலிகை இட்ட பெண்களுக்கு சந்தனம், குங்குமம், பூ, தாம்பூலம்,
பழம், கொடுத்து பெருமை படுத்தவேண்டும்.
அடுத்து மணப்பெண்ணிற்கு முகூர்த்த சேலை, சட்டை மஞ்சள் தடவி குருக்களால்
கொடுக்கப்பட வேண்டும்.
படைப்பு படைத்து பூஜை செய்தல் :
மாப்பிள்ளை மூகூர்த்த ஆடை உடுத்தி மணமேடைக்கு அழைத்து வரப்படுவார்.
திருவிளக்குகள் முன்னால் 5 நுனி வாழை இலைகள் விரிக்க வேண்டும். (இலை போடும் முறை)
மத்தியில் ஒரு இலையும் கிழக்கு மேற்கு தெற்கு வடக்கு பக்கமாக நான்கும் ஆக 5 ௦ இலைகளை போட்டு
தண்ணீர் தெளித்து 5 இலைகளின் மீதும் பொங்கலிட்டு வைத்துள்ள சாதத்தை படைக்க வேண்டும். இத்துடன் வெல்லம் நெய்
வாழைப்பழம், தேங்காய் துண்டு ஆகிய பொருள்களையும் இட்டு
பஞ்ச தேவதைகளான சிவன், விஷ்ணு, இந்திரன்,சந்திரன் ஆகியோருக்கு மாப்பிள்ளை வீட்டாரை சேர்ந்த மாப்பிள்ளையின்
அத்தையோ அல்லது மாமனின் மனைவியோ பூஜை செய்து மாப்பிள்ளையின் வலது கையின் மேல் வெற்றிலை பாக்கு, பழம் வைத்து மாப்பிள்ளையின் கையைப்பிடித்து கையின்மேல்
வைத்துள்ள தாம்பூலம் மீது நீர் விட்டுக் கொண்டே மண மேடையை வலம் வந்து இலைகளின்
மேல் படைத்த படைப்பு முன்பாக வணங்கி முடிக்க வேண்டும்.
அதன் பின் மணமேடைக்கு வடபக்கத்தில் மேற்கு முகமாக
மாப்பிள்ளையை நாற்காலியில் அமரச் செய்ய வேண்டும்.
சகுனப்பார்வை பார்த்தல் பரிசம் போடுதல்:
மணப்பெண் முகூர்த்த சேலை அணிந்து மணமேடைக்கு வருமுன் மாப்பிள்ளையின் தகப்பனார்
(பெண்ணின் மாமனார்) வெற்றிலை பாக்கு , மஞ்சள், குங்குமம், பழவகைகள் மஞ்சள் தடவிய மூன்று
தேங்காய்கள் (தேங்காயின் 9 கண்களிலும் ஏற்கனவே வெள்ளியிலான கண் பொருத்தியிருக்க வேண்டும்)
பூ ஆரம் இரண்டு ஆகிய மங்கலப் பொருள்கள் நிறைந்த தாம்பாளத்தை பட்டுப்பாயில்
கிழக்கு முகமாக உட்கார்ந்திருக்கும் மணப்பெண்ணின் முன் வைத்து மாமனார் பெண்ணின் எதிரில்
அமர்ந்து மாப்பிள்ளை வீட்டுக் கோத்திரத்தை சொல்லி மருமகளே இன்று முதல் நீ எங்கள் இல்லத்திற்கு
மகாலேட்சுமியாக வருகிறாய். எங்கள் குடும்ப பாரம்பரியத்தை காப்பாற்ற வேண்டியது
உனது கையில்தான் இருக்கிறது என்று கூறி ஒவ்வொரு தேங்காயாக மணப்பெண்ணின் கையில் மாமனார்
கொடுக்க வேண்டும். மாமியார் தங்க ஆபரணமும், மாமனார் மோதிரமும் அணிவித்து திருநீர்
பூசி மணப்பெண்ணை ஆசிர்வதிக்க வேண்டும்.
அடுத்த பெண் மணமேடைக்கு வந்து திருவிளக்குகள் முன்பாக முன்பு மாப்பிள்ளைக்கு
கூறியது போல படைப்பு போட்டு பெண்ணின் அத்தை அல்லது தாய்மாமனின் மனைவி பூஜை செய்து பெண்ணை
மணமேடையை வலம் வரச் செய்து மணமேடைக்கு வடபக்கத்தில் மாப்பிள்ளைக்கு எதிராக கிழக்கு
முகமாக நாற்காலியில் அமரச் செய்ய வேண்டும்.
பின் ஊஞ்சல் சடங்கு செய்ய வேண்டும் (குருக்கள் தேங்காய்பழம் தாம்பூலம்,
தட்சணை ஆகியவற்றை நாதஸ்வர வித்வான் அவர்களுக்கு கொடுத்து ஊஞ்சல் பாட்டு பாட கூற வேண்டும்)
மாப்பிள்ளையின் தாய்மாமனார் மரச்செப்பில் வைத்திருக்கும்
திருமாங்கல்யத்தை சகுனப்பார்வைக்கு வைத்திருந்த தாம்பாளத்தில் வைத்து சபையில் உள்ள
பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெற்று மணமேடைக்கு கொண்டு வர வேண்டும்.
தாரைவார்த்தல் (கைக்கு நீர் வார்த்தல்) சடங்கு
மணமேடையில் பட்டுப்பாய் விரித்து அதில் மாப்பிள்ளையை வடக்கு பக்கமாகவும்
பெண்ணை தெற்கு பக்கமாகவும் கிழக்கு நோக்கி அமரச் செய்ய வேண்டும்.
மாப்பிள்ளையின் தகப்பனார் வலது கையின் மேல் தாயார் கையை வைத்து அதற்கு
மேல் மாப்பிள்ளையின் கையை வைக்க வேண்டும். மாப்பிள்ளையின் கையின் மேல் பெண்ணின்
வலது கையை வைத்து பெண்ணின் கையில் தேங்காய், வெற்றிலை பாக்கு வைத்திருக்க
வேண்டும்.
பெண்ணின் தகப்பனாரும் தாயாரும் எங்களுடைய திருமகளை உங்களுடைய திருமகனுக்கு
மும்மூர்த்திகள் இந்திரன் முதலான தேவர்கள், சூரியன்,சந்திரன், உற்றார் உறவினர்கள் பெரியோர்கள்
சாட்சியாக கன்னிகாதானம் செய்து கொடுக்கிறோம் என்று கூறி மூன்று முறை நீரை வார்க்க வேண்டும்.
திருமாங்கல்ய தாரணம்
திருமாங்கல்ய தாரணம் ஆரம்பிக்கும் போது ஆயுரத்தெட்டு திரி விளக்கினை ஏற்ற
வேண்டும். பெண்ணையும் மாப்பிள்ளையையும் கிழக்கு மேற்காக எதிர் எதிராக உட்கார
வைத்து மாப்பிள்ளை, பெண் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவிக்க,பின்பக்கமாக மாப்பிளையின் சகோதரி உடனிருந்து திருமாங்கல்ய முடிச்சு மூன்று முறை போடா வேண்டும். பின் மாப்பிள்ளை தனது கையால் திருமாங்கல்யதிற்கு சந்தனம், குங்கமம்
வைத்து பூச்சுடி விடவேண்டும். பின் தன் கழுத்திலிருந்து இரண்டு பூ மாலைகளை எடுத்து மணப்பெண்ணின் கழுத்தில் அணிவிக்க
வேண்டும். இது போன்றே மணப்பெண்ணும் தன்கழுத்தில் இருந்த
இரண்டு பூ மாலைகளை எடுத்து மணமகனுக்கு அணிவிக்க வேண்டும். இவ்வாறு இருவரும் மூன்று
முறை செய்ய வேண்டும்.
குறிப்பு : சூலம் பார்க்க தேவையில்லை யாத்திரைகளுக்கு தான் பார்க்க
வேண்டும்.
மாப்பிளையும் பெண்ணும் மணமேடையில் கிழக்கு நோக்கி இருக்க வேண்டும்.
பெண்ணின் தாய்மாமன் பெண்ணிற்கு பட்டம் தலையில் கட்டி பெருமை செய்து மணமக்களை ஆசீர்வதிக்க
வேண்டும்.
அதன்பின் மணமக்கள் மனமேடை முன் நின்று பெண்ணின் தம்பி, மணப்பெண்ணின் கைகளில்
நெல்பொரி அள்ளி கொடுக்க அதனை பெண், மாப்பிளையின் கைகளில் கொடுக்க மாப்பிள்ளை பொரியை
ஓம குண்டத்தில் வளர்க்கப்பட்ட அக்கினி பகவானுக்கு அளித்து இருவரும் வணங்க வேண்டும்.
மணமக்கள் இருவரும் தங்களது வலது கைகளை இணைத்து, மணப்பெண் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து
மூன்று முறை மணமக்கள் மணமேடையை வளம் வர வேண்டும். (மூன்று முறையும் பொரி, முன்பு
கூறியது போல அக்னிக்கு இட்டு கும்பிட வேண்டும்)
மணமகள் மட்டும்தான் அம்மி மிதிக்க வேண்டும் (அம்மி உறுதியானது, அதுபோல
கற்பு நெறியும் மன உறுதியும் இருக்க வேண்டும் என்பது இதன் கருத்து)
பின் மணமக்கள் நாற்காலியில் அமரச் செய்ய வேண்டும் மணமக்களை பெரியோர்கள்
ஆசீர்வதிப்பார்கள்.
குறிப்புகள்:
ஆயிரத்தெட்டு திரி விளக்கு யானையின் பக்கம் இருக்க வேண்டும்
அரசாணிக்கால் யானையின் வலது பக்கம் கட்டப்பட வேண்டும்.
மயில், பிறை சூடுதல்:
பொன்னினால் ஆன மயில் போன்ற ஆபரணத்தை மாப்பிள்ளையின் தாயார் மணப்பெண்ணின் தலையில் சூட்டுவார். மாமியார்
மணப்பெண்ணிற்கு மயில் கட்டுவதற்கு முன்பு இனிப்பு (வெல்லம்) ஊட்டுவது முறை. இந்நிகழ்ச்சியின் விவரமாவது : நம் இருவரின் (மாமியார்+மருமகள் ) உறவும் கசப்பேதுமின்றி
இனிப்பாகவே இருக்கும். உனக்கு நான் தாய் போன்றவள். நீ எனக்கு மரு+மகள்,
என்று தனது பாசத்தை வெளிப்படுத்துகிறார். வெல்லம் கொடுத்த பின்பு மாமியார் "மயிலை"
அணிவிக்கிறார். மணப்பெண் தலையில் "மயிலை" அணிவிப்பதன் அர்த்தமாவது:
"ஆனந்த ரூப மயிலே என்றுமயிலைப்பற்றிகூறுவதுண்டு. ஆனந்தத்தையே உருவமாகக் கொண்ட மயிலைப் போன்று மணப்பெண் வாழ்க்கை முழுவதும்
ஆனந்தமாக இருத்தல் வேண்டும் என தனது வாழ்த்துதலை தெரிவிப்பதன் பொருட்டு பொன்னாலான மயில் உருவத்தை மாமியார்
மணப்பெண்ணின் தலையில் சூடுகிறார் எனக்கொள்ளலாம்". மஞ்சள் தடவிய தேங்காய் ஒரு கையுலும், பச்சரிசி மாவினால் செய்த
ஆடை ஒருகையுலும் வைத்து தனது மருமகளின் காதில் தன்
பெயரை கூறி வரிசையார் என்ற ஒரு பட்டமும் கொடுக்கிறார்.
வரிசையார் என்பதின் அர்த்தமாவது "எனது குடும்பத்திற்கு நீ இன்று வந்து விட்டாய் இந்த குடும்பத்தில் எனது ஆண், பெண் குழந்தைகளுக்கு தொடர்ந்து செய்து வருகின்ற பிறந்த வீட்டின் சீர் வரிசைகளை எனக்குப் பின்னால் நீ தான்செய்து வரவேண்டும். பெண்களுக்கு,தான்பிறந்த வீட்டில் தனது தாய்க்கு பின் தமையன் மனைவி சீர்வரிசை செய்ய கடமைப்பட்டவள் என்ற குறிப்பை உணர்த்தவே "வரிசையார்" என்ற சொல் வழக்கத்தில் இன்று
உள்ளதாகும்."பிறை" வடிவத்திலுள்ள பொன் ஆபரணத்தை மணமகனின் சகோதரிகள் மணப்பெண் தலையில் அணிவிப்பார்கள்.
"நீ வந்துள்ள எங்கள் குடும்பம் வளர்பிறைபோல் வளர்ந்து வரவேண்டும்.
நீ சிறப்புடன் இருந்து எங்கள் தாய் போல், எங்களுக்கு பிறந்த வீட்டின் சீர் செய்ய வேண்டிய கடமை, உன்னைச் சார்ந்தது.
எங்களுக்கு இன்று முதல் வரிசையார் ஆகிறாய் என வாழ்த்தி இனிப்பு கொடுக்கிறார்கள்.
அடுத்த நிகழ்ச்சி அம்மானை கழச்சி எடுத்தல்
மஞ்சள் பொடி கலந்த தண்ணீர் உள்ள பாத்திரத்தில் அம்மானை மூன்று, கழச்சி
ஏழும், தவழும் நிலையிலுள்ள கிருஷ்ண விக்கிரகம் ஒன்றும், மாப்பிள்ளையின் விரலிலிருந்து
ஒரு மோதிரமும் போட்டு வைக்க வேண்டும். மணப்பெண்ணும், மணமகனும் ஒரே நேரத்தில்
பாத்திரத்தின் நீரின் மூழ்கியுள்ள பொருட்களை மூன்று முறை எடுக்க வேண்டும்.
கடைசியான மூன்றாவது தடவையில் எல்லா பொருட்களையும் விடாது எடுத்து மணமகன் மணமகளின் கையில்
கொடுக்க மணப்பெண் தன் சேலை முந்தானையில் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கான பொருளாவது.
"இன்று நமக்கு திருமணம் முடிந்தது. நம் குலம் விளங்க குழந்தை
செல்வங்கள் பெறவேண்டுமென்பதை குறிப்பதாகும்"
ஓர் பனை ஓலையில் மணமகன் தன பெயர், கோத்திரம், மனைவியின் பெயர் இவற்றை எழுத்தாணியால்
எழுதவேண்டும். ஓலைதான் நடப்பில் இருந்த காலத்தின் நிலை. தற்பொழுது தாளில்
பென்சில் அல்லது பேனா வைத்து எழுதலாம்.
இதன்பின் சாதம் நிறைந்த பாத்திரத்தில் இலையைப் போட்டு அதன் மேல் சமைத்த
காய்கறி வகைகள், அப்பளம் முதலியவற்றை வைத்து, அந்தப் பாத்திரத்தை மணமேடையின் முன்பாக
வைத்து பாத்திரத்தின் ஒரு பக்கம் மணப்பெண்ணும், மறுபக்கம் ஓர்ப்படியும் பிடித்து அப்பாத்திரத்தோடு
மணமேடையை ஒருமுறை சுற்றிவந்து பாத்திரத்தை இறக்க வேண்டும். இதன்
பொருளாவது :-
நானும் நீயும் ஒரே வீட்டிற்கு மருமகள்களாக வந்துள்ளோம். இருவருக்கும்
வீட்டின் பொறுப்பு சமமானதாகும். ஒரே பானையில் ஒற்றுமையாக சமைத்து எல்லோரும் ஒன்று
கூடி உணவருந்த வேண்டும் என்ற கூட்டுக்குடும்ப ஒற்றுமையை எடுத்துக் காட்டுவதாகும் இந்த
சோறு தூக்கும் சடங்கு.
சட்டரசம்:
மாப்பிள்ளைக்கும் அவரது குடும்பத்தை சார்ந்தவருக்கும் இரட்டை இலையில் மணப்பெண்
உணவினை பரிமாற வேண்டும். முதலில் இலையில் பால் ஊற்றி, ஜீனி, பூந்தி போட வேண்டும்
அதன்பின் பாயாசம், பழம் வைக்க வேண்டும். சாதமும் நெய்யும் பிறகு இட வேண்டும்.
இதற்கு பயன்படுத்தும் பாத்திரங்கள் புதியதாக இருக்க வேண்டும்.
இதற்கு விளக்கமாவது:
இப்பொழுது உன்னால் பரிமாறப்பட்டு உணவருந்தியவர்கள் அனைவரும் நம் குடும்பத்தினர்.
அவர்களுக்கு இனிமேல் உணவாக்கி பரிமாற வேண்டிய பொறுப்பு உன்னுடையதே என உணர்த்துவதாகும்.
நாலாம் நீர்ச் சடங்கு:
மணம்மேடையில் வைத்து மணமகனும், மணமகளும் ஒருவருக்கொருவர் எண்ணெய்,
சீயக்காய், மஞ்சள் பொடி இவற்றை உச்சியில் தொட்டு வைத்து பின் நாலாம் நீருக்கான
புத்தாடைகளை உடுத்த வேண்டும். பிறகு பெண்ணின் தம்பி மாப்பிள்ளைக்கும் பெண்ணிற்கும்
பன்னீர், சந்தனம், குங்குமம் கொடுத்து மலர் மாலைகள் கழுத்தில் அணிவித்து பெருமைப்படுத்த
வேண்டும். மாப்பிள்ளையின் கைவிரலுக்கு மோதிரம் அணிவித்து வெற்றிலை பாக்கு பழம்
தேங்காய் நிறைந்த தாம்பாளத்தில் சுருள் பணம் வைத்து மாப்பிள்ளைக்கு தருதல் வேண்டும்.
இந்த சுருள் கொடுத்த பின் இருவீட்டாரும் மணமக்களுக்கு விபூதி பூசி ஆசீர்வதிக்க வேண்டும்.
அனைவருக்கும் தாம்பூலம் கொடுக்க வேண்டும்.
நாலாம் நீர் முடிந்த பிறகு காப்பு அகற்றுதல் வேண்டும். காப்பு அகற்றும்
முன்பு நவதாளியை கழற்றி யானையின் கழுத்தில் போட்டு குதச்சு கட்ட வேண்டும்.
மணமேடை முன்பு மணமகனையும், மணமகளையும் ஒன்றாக நிற்க வைத்து ஒரு தாம்பாளத்தில்
பச்சரிசியிட்டு அதன்மேல் மணமகனின் இரு கைகளையும் சேர்த்து வைத்து கைகளின் மேல் தேங்காய்
வைக்க வேண்டும். அதன் பின் கையிலுள்ள காப்பை சிறிய கத்தினால் அகற்ற வேண்டும்.
அகற்றப் பட்ட காப்பை மணமேடையின் முன்புள்ள யானையின் தலையின் மீது வைக்க வேண்டும்.
இதேபோன்று பெண் காப்பை அகற்றி அதனை குதிரையின் தலையின் மேல் வைக்க வேண்டும்.
பிறகு மணமக்கள் கோவில் சென்று தரிசனம் செய்து வர வேண்டும் அதன் பிறகு சாந்தி
முகூர்த்தம்.
திருமண வைபவத்திற்கு செய்ய வேண்டிய ஏற்பாடு விபரங்கள்
1.
திருமண மண்டபம் (முக்காலி, அம்மி)
2.
திருமண அழைப்பிதழ்
3.
மணமேடை, மாலை ஆரங்கள்
4.
யானை, குதிரை தீபம் முளைப்பாலிகை
5.
ஆர்ச் வாழை
6.
மேளம்
7.
கார், வேன், ஆட்டோ
8.
சமுக்காளம், தலையணை
9.
குருக்கள் மற்றும் அவர் பொருட்கள்
10. தாம்பூலப்பை மற்றும் அதற்குரிய சாமான்கள்
11. தவசுப்பிள்ளை மற்றும் பரிமாற ஆட்கள்
12. தவசுப்பிள்ளைக்கு தேவையான சாமான்கள்
13. பலசரக்கு
14. காய்கள் மற்றும் இலை
15. உணவு வகைகள்
16. பால், தயிர் வகைகள்
17. வீட்டுசாமான்கள் மண்டபத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டியவைகள்
18. குருக்களுக்கு வீட்டிலிருந்து எடுத்துச் செல்லவேண்டிய சாமான்கள்.
19. மாப்பிள்ளை அழைப்புக்கு எடுத்துச் செல்ல வேண்டிய சாமான்கள்.
20. பெண் அலங்கார வகை
21. போட்டோ, வீடியோ
22. மாப்பிள்ளை, மருமகன்களுக்கு கொடுக்க வேண்டிய சுருள்கள்
23. மறுவீட்டு பலகாரங்கள்
வரவேற்பிற்கு வீட்டிலிருந்து எடுத்துச் செல்ல வேண்டிய சாமான்கள்
1.
சிறிய தாம்பாளம்
2.
பன்னீர் செம்பு
3.
சந்தன கும்பா
4.
குங்குமச்செப்பு
5.
ஆரத்தி எடுக்க தட்டு
6.
கற்கண்டு போட தட்டு
திருமண வைபவத்திற்கு யார், யாருக்கு என்னென்ன வேலைகள் என்று ஒதுக்கீடு
செய்ய வேண்டிய விபரங்கள்
1.
மண்டபத்திற்கு வரும் காய்கறிகள் பலசரக்குகள்,
குருக்கள் சாமான்கள், பூ வகைகள், தாம்பூல சாமான்கள், பால், தவசுப்பிள்ளைக்கு தேவையான
சாமான்கள் எல்லாவற்றையும் லிஸ்ட்படி சரிபார்த்து ஒப்பிட்ட பின் மேற்படி சாமான்களுக்கு
யார் பொறுப்பு உடையவர்களோ அவர்களிடம் ஒப்படைப்பு செய்ய வேண்டிய நபர்களின் பெயர்கள்.
2.
திருமணத்திற்கு முந்திய நாள் காலை காய்கறிகள் வாங்க
போக வேண்டிய நபர்கள்
3.
பலசரக்கு வாங்க போக வேண்டியவர்கள்
4.
வெற்றிலை, பாக்கு சந்தனம், பன்னீர் வாங்க வேண்டியவர்கள்
5.
மாப்பிள்ளை அழைக்க போக வேண்டியவர்கள்
6.
காலையில் வரவேற்பு கவனிக்க வேண்டியவர்கள்
7.
மணமேடை கவனிக்க
·
குருக்களுக்கு தேவையான உதவிசெய்வது சாமான்கள்
எடுத்துக் கொடுத்தல்.
·
திருமண குறிப்புப்படி திருமண காரியங்கள் நடக்க
உதவி செய்தல்
8. மணமகள் மொய் கவர்கள்
வாங்குபவர்கள்
9. மணப்பெண் உடைகள், நகைகள்
பொறுப்பாக கவனிக்க கூடியவர்கள்
10. சாப்பாடு வகையை பரிமாறுதல் கவனிப்பவர்கள்
11. சாப்பாட்டிற்கு பின் தாம்பூல கவர்கள் கொடுப்பவர்கள்.
திருமண வைபவத்தில் மாப்பிள்ளை மற்றும் வீட்டு மருமகன்களுக்கு கொடுக்க
வேண்டிய சுருள்கள்
1. மாப்பிள்ளை அழைப்பு
2. நாலாம் நீர் சடங்கு
§ விநாயகர் சுருள்
§ ஆனந்த சுருள்
§ கைபிடிச் சுருள்
§ கலத்துச் சுருள்
§ பல்லாங்குழிச்சுருள்
§ பூதகணச்சுருள்
§ பள்ளியறைச்சுருள்
§ நாலாம்நீர்ச் சுருள்
3. மறுவீடு
·
முதல் மறுவீடு
·
இரண்டாவது மறுவீடு
4. பக்கச்சுருள்
·
மாப்பிள்ளை தம்பிகள் சுருள்
5. வீட்டு மருமகன்கள்
குருக்களுக்கு வாங்க வேண்டியவை :
1.
மஞ்சள்
2.
மஞ்சள்பொடி
3.
மாப்பொடி
4.
கட்டிச்சூடம்
5.
ஊதுபத்தி
6.
தீப்பெட்டி
7.
முப்பிரிநூல்பந்து
8.
தீபத்திரி நூல்
9.
சந்தனம்
10.
குங்குமம்
11.
விபூதி பாக்கெட்
12.
வெற்றிவேர், விலாமிச்ச வேர்
13.
லவங்கம்
14.
சீனாக்கற்கண்டு
15.
சீனா முந்திரிபழம்
16.
பேரிச்சம் பழம்
17.
அச்சுவெல்லம்
18.
எள்ளு
19.
உழுந்து
20.
நவதானியம்
21.
தேங்காய்
22.
பழம்
23.
வெற்றிலை
24.
வெட்டு பாக்கு
25.
இலை பூட்டு
26.
நெல்
27.
பச்சரிசி
28.
நெல்பொரி
29.
நெய்
30.
பசும்பால்
31.
தயிர்
32.
உமி
33.
சாணம்
34.
கோமியம்
35.
ந.எண்ணெய்(1000 தீபத்திற்கு)
36.
கும்பவஸ்திரம்
37.
அல்வான் துணி
38.
பச்சை கலர்
39.
ஆச்சாரியார் - வஸ்திரம், நேரியல்
40.
பெண் மாப்பிள்ளை கைகட்ட துணி - மஞ்சள் அல்லது பட்டு துண்டு
41.
மாவிலை
42.
மாங்கால்
43.
அரசாணி
44.
மாஞ்சுள்ளி
45.
தெர்பை (குருக்கள் கொண்டு வருவார்)
46.
தோண்டி -
2
47.
கலசம் -
10
48.
முளைப்பாலிகை - 12
49.
ஆயிரதீபம் -
1
50.
ஓமகுண்டம் -
1
51.
யானை குதிரை பானை செட்
குருக்களுக்கு வீட்டிலிருந்து எடுத்துச் செல்ல வேண்டியவை
- குத்துவிளக்கு
- 2
- நிறைநாழி
- 1
- தாம்பாளம்
- 4 சிறியது 3 பெரியது 1
- வட்டகை
- 2 ஆசீர்வாத அட்சதை
- தம்ளர்
- 2
- நவதானியம் ஊறவைக்க பாத்திரம்
(திருமண முதல் நாள் இரவு ஊறவைக்க வேண்டும்)
- செம்பு
- 1
- முக்காலி
- 1
- சந்தனகும்பா
- 1
- குங்குமச்செப்பு
- 1
- அரிவாள்
- 2
- சூடன் தட்டு
- அட்சதை வைக்க தட்டு
- மணி
- 1
- விபூதி பூச பவுல்கள்
- 2
- பஞ்ச பாத்திரம் உத்தரணி செட்
மாப்பிள்ளை வீட்டில் இருந்து கல்யாணத்திற்கு செல்லும் சமயம்
கொண்டு செல்ல வேண்டிய சாமான்கள்
- மஞ்சள்
- தேங்காய் -
3
- பழம்
- வெற்றில்லை
- இலை விபூதி
- தாலி செயின்
- மரச் செப்பு
- மோதிரம் (சகுனப்பார்வை)
- வெள்ளிக் கண் -
9
- மயில்பிறை
- முகூர்த்த புடவை, வேஷ்டி, ஜவுளிகள்
- சூட்கேஸ் (மாப்பிளை டிரஸ்) ஸ்வீட்.
குழந்தை பேற்றிற்கு தாய்வீட்டிற்கு அழைத்தல்
இல்லறத்தின் வெற்றியின் ஒரு பிரிவாகத் திகழ்வது நல்ல மக்களைப்
பெறுவதாகும். சிறந்த அறிவான குழந்தையைத் தாய் ஈன்றேடுக்கத் தாய் கருவுற்ற
காலத்தில் உள்ள சில சடங்குகள் செய்து மகிழ்கின்றனர்.
இல்லறத்தை நல்லறமாக நடத்தி வரும் பெண் தாய்மைப் பேறு அடைந்தவுடன்
மாப்பிள்ளைவீட்டார் பெண் வீட்டிற்கு தகவல் தெரிவிக்கிறார்கள்.
கருவுற்ற பெண்ணை 5 ம் மாதம் தாய்வீடு அழைத்து சென்று சில சடங்குகள்
செய்கின்றனர். வாய்க்குச் சுவையான உணவுகள் கொடுப்பார்கள். கருவுற்ற பெண் தாய்வீடு
என்றாலே மனமகிழ்வுடனும் நல் சிந்தனையுடனும் இருப்பாள். பின்பு மாப்பிள்ளை
வீட்டிற்கு சென்று விடுவாள்.
7 ம் மாதம் அல்லது 9 ம் மாதம் நல்ல நாள் பார்த்து, பேறு
காலத்திற்கு பெண் பிறந்த வீட்டிற்கு வருகிறார். பெண் வீட்டார் அழைக்க செல்லும்
சமயம் கீழ்கண்ட பொருட்களுடன் செல்ல வேண்டும்.
இனிப்பு, பழம் 1 குலை, தேங்குழல், விடலை தேங்காய்
அன்று மாப்பிள்ளை வீட்டில் விளக்கு முன்பு மேற்கண்ட சாமான்களை
வைத்து ஆசீர்வாதம் செய்ய வேண்டும். பிறகு சாப்பாட்டிற்கு பின் நல்ல நேரத்தில்
பெண்ணை கூட்டி வர வேண்டும்.
குறிப்பு: பெண் முகூர்த்தப் புடவை மற்றும் நகைகள் யாவும் அணிந்து
வர வேண்டும்.
குழந்தைக்கு காப்பிடுதல்
திருமணம் ஆன பின்பு, அடுத்த மகிழ்ச்சியை கொடுக்கக்கூடிய நிகழ்ச்சி
முதல் பிள்ளை பிறந்து குழந்தைக்கு காப்பு அணிவித்தலும் பெயர் சூட்டும் சுப
காரியமும் ஆகும். பெரும்பாலும் நம் குல பெண்கள் முதல் மகவைத் தன் தாய் வீட்டில்
தான் பெற்றெடுப்பார்கள். குழந்தை பிறந்த 16 நாள் கழித்த பின் 3 மாதங்களுக்குள் நகை
போட்டுப் பார்க்க வேண்டும். அந்த சுப நிகழ்ச்சிக்குத்தான் காப்பிடுதல் என்று
பெயர்.
காப்பிடும் சுபயோக வேளையில் வீட்டில் உள்ள சூரிய ஒளிபடுகின்ற
வாசலில் கிழக்கு முகமாக இரண்டு இலைகள் போட்டு அதில் திருவிளக்கு, பிள்ளையார்,
நிறைநாழி யாவையும் வைக்க வேண்டும். அதனுடன் வெற்றிலை, பாக்கு, பழம், வெல்லம்,
காப்பு அரிசி, பூந்தி முதலிய பொருள்களையும் வைக்க வேண்டும். குழந்தையின் அத்தை
(மாப்பிள்ளையின் சகோதரி) என்பவள் பொன்னால் செய்யப்பட்ட வளையல்களையும், வர்ணம் பூசிய
சொளவு என்று சொல்லுகின்ற முறத்தையும் கட்டாயம் கொண்டு வர வேண்டும். அதனோடு
பூந்தியும் வாங்கி வரவேண்டும். அத்தை காலுக்கு தண்டை, வெள்ளி கொலுசு
வாங்கி வர வேண்டும்.
தந்தை வழி பாட்டனார் சட்டை மற்றும் கழுத்துக்கு பொன்னால் ஆன
ஆபரணமும் வாங்கி வருவார். தாய் வழிப்பாட்டனார், தங்கத்தால்
ஆன அரைச்சலங்கைசெய்து அணிவிப்பார். முன் கூறப்பட்ட நகைகள் அனைத்தையும் நாளியில் போட்டு அதையும் வாசலில்விளக்கு முன்னால் வைத்திருப்பார்கள். மஞ்சள் தடவிய தேங்காய் ஒன்றும் நாளியின் பக்கத்தில் வைக்கவேண்டும். அத்தைகொண்டு வந்த சொளவிலே பெண்ணின் முகூர்த்தப்புடவையை விரித்து அதன் மேல் குழந்தையை படுக்க வைப்பார்கள். விளக்கின் முன்னால்
சூரிய பகவானுக்கு யாவற்றையும் நைவேத்தியம் செய்து பூஜை செய்ய வேண்டும். பூஜை
முடிந்தபின் சூரிய பகவான் முன்பாக ஒரு புறம் அத்தையும் மறுபுறம் தாய் வழி
அம்மாச்சியும் சேர்ந்து சொளவில் உள்ள குழந்தையை அப்படியே சொளவோடு மூன்று முறை
தூக்கி தரையில் வைத்து " நீ இன்று சொளவு நிறைந்து காணப்படுவது போல் நீ வளர்ந்து
பெரியவனாகி உலகம் புகழ வாழ வேண்டும்" என்று சொல்லி வாழ்த்துவார்கள். அதற்கு பின்பு
சொளவோடு குழந்தையை வீட்டிற்குள் எடுத்துச் சென்று பிள்ளையின் தாயார் தன் வீட்டின்
நிலைக்கதவை அடைத்து தாள் போட்டு விடுவாள். குழந்தைக்கு அத்தையானவள் (தகப்பனாரின்
சகோதரி) தனது வரிசியாரைக் கூப்பிட்டு "நீ குழந்தை பெற்ற செய்தி அறிந்து ஆசையோடும்
அன்போடும் காப்பு போட உன் வீட்டிற்கு வந்து கதவைத் தட்டுகிறேன்" என் கையில் ஒரு
நாளி நகை இருக்கிறது. சீக்கிரம் கதவைத் திற என்று வலது கரத்தில் மஞ்சள் தடவிய
தேங்காயைக் கொண்டு கதவைத் தட்டுவாள். இடது கையிலே நாளியை வைத்திருப்பாள்.
அதன்பின் குழந்தையை பெற்றவள் கதவைத் திறந்து விடுவாள். முதலில் அத்தைதான் கையில்
காப்பு அணிவிக்க வேண்டும். காலில் கொலுசு, தண்டை, முதலிய அணிகளையும் அணிவிக்க
வேண்டும். பின் தாய் வழிப் பாட்டனார் தந்தை வழிப் பாட்டனார் மற்றும் உறவினர்கள்
பொன்னகை போட்டபின் பிள்ளையின் தகப்பனார் குழந்தையை தன் மடிமீது வைத்து கிழக்கு
முகமாக இருந்து குழந்தைக்கு மோதிரத்தை தேனில் தோய்த்து வாயில் ஊட்டி பெயர்
சூட்டுவார். பிள்ளையின் வலது காதிலே பெயரை மூன்று முறை குழந்தையின் தந்தை சொல்ல
வேண்டும். இதுதான் காப்பிடுதலின் விளக்கம். பின்னர் குழந்தையை ஆசீர்வாதம்
செய்ய வேண்டும்.
முதல் ஆண்டு நிறைவு விழா
குழந்தைக்கு ஓராண்டு முடிந்ததும் குழந்தை பிறந்த நட்சத்திரத்தில்
இவ்விழா நடைபெறும். மாப்பிள்ளை வீட்டார் மேற்படி விசேடத்தை பெண் வீட்டார்க்கு
தெரிவிக்க வேண்டும்.
பெண் வீட்டார் பிறந்த தினத்தில் குழந்தைக்கு
புத்தாடை எடுத்து கொடுக்க வேண்டும். அன்று கோவில் செல்லும் சமயம் பெண் வீட்டார்
ஒரு தாம்பாளத்தில் தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, புஷ்பம் சுருள் புத்தாடை
வைத்து மாப்பிள்ளை, பெண் குழந்தை ஆகியோரிடம் குடுக்க வேண்டும். பின்பு கோவில்
சென்று அர்ச்சனை செய்து புதிய ஆடை அணிவித்து குழந்தையை ஆசீர்வாதம் செய்ய வேண்டும்.
மறுநாள் கோவில் சென்று முடி காணிக்கை செலுத்த வேண்டும். இதற்கு
பெண் வீட்டார் ஒரு தாம்பாளத்தில் மேற்கண்ட பொருட்களை வைத்தும், காது குச்சியும்
வைத்து, மாப்பிள்ளை வீட்டார் வசம் கொடுக்க வேண்டும். குழந்தையை தாய்மாமன் மடியில்
வைத்து, முடிகாணிக்கை மற்றும் காது குத்து விசேடம் செய்யப்பட
வேண்டும். பின்பு கோவில் சென்று அர்ச்சனை செய்து குழந்தையை ஆசீர்வாதம் செய்ய
வேண்டும். பெண் வீட்டில் இருந்து பூந்தி, காப்பரிசி, செய்து விசேடத்தில் கலந்து
கொண்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் (மேற்படி சடங்குகளை குலதெய்வம் கோவில்களிலும்
நிகழ்த்துவார்கள்)
நவதாலியின் விளக்கமும் விளக்கிடு கல்யாண விபரமும்
நவதாலி என்பது சொல் வழக்கில் நவனாலி என்று பேசப்படுகிறது. நவதாலியின் அமைப்பை பார்த்தால் பவளமணிகள் 10ம் தங்க உருண்டை மணிகள் ஒன்பதும் ஆக
மொத்தம் 19 உருண்டைகள் சேர்த்துக் கோர்த்திருக்கும். பவளம் என்பதின் அம்சம், சிவபெருமானின் அருள்வடிவை குறிக்கும்.
சிவபெருமானின் நிறம் சிவந்த மேனியான நெருப்பின் ஒளியான பிரகாசத்தை உடையது. பொன்னார்
மேனியனே என்று அவனைப் போற்றி அடியார்கள் எல்லாம் பாடியுள்ளார்கள். தங்க மணிகள்
ஒன்பதும் நவசக்தி நாயகியின் அம்சமாகிய பராசக்தியாகிய அம்பிகையின் அருள்வடிவம்
ஆகும். 9 நாயகிகளுக்கு 9 நாயகர் வீதமும் 10 வது பவளம் பிரதானமான ருத்திர
மூர்த்தியான சிவபெருமானைக் குறிக்கும். 19 மணிகளும் சிவசக்தி அருள் வடிவாகும்.
சிவசக்தி வடிவமான நவதாலியை தாய் வழிப்பாட்டனார் மூலம் 5 வயது நிரம்பிய கன்னிப்
பெண்ணிற்கு தை பொங்கல் நன்னாளில் சூரிய பகவான் முன்பு கழுத்தில்
அணிவிக்கப்படுகிறது. 5 வயது பெண் வளர்ந்துபெரியவள்ஆகி திருமண வயது வந்த காலத்தில் கணவனால் திருமாங்கல்யம் அவளுக்கு பூட்டும் வரை பெண்ணின் கற்புக்கு காவலாக, பாதுகாத்து, மந்திர தந்திரங்களாலோ அல்லது வேறு தீய செயல்களினாலோ தீங்கு ஏற்படாமல் பாதுகாத்து குலமகளாக விளங்கச் செய்யும் அம்மையும் அப்பனும் பெண்ணிற்கு
அருள் கொடுத்து என்றும் காப்பார்கள் என்பது ஐதீகம். இந்த தாலியை திருமணம் நடைபெறும் நாள் வரை
ஒரு பெண் கழுத்திலிருந்து அகற்றாமல் இருந்து வரவேண்டும். கணவனால் அணிவிக்கும்
திருமாங்கல்யம் கட்டப்பட்ட பின்னால் திருமண நாள் அன்று தான் நவதாலியை
கழுத்திலிருந்து கழற்றிய பின் நவதலியால் கோத்துள்ள மணிகளில் சிவ அம்சமான பவளமணி
மூன்றையும் சக்தி வடிவமான தங்கமணி இரண்டையும் ஒன்றாக சேர்த்து கோர்த்து
திருமாங்கல்யத்தோடு கட்டுவது பழக்கம். கணவனது உயிருக்கும் உடமைகளுக்கும் எங்கள்
குடும்பத்தையும் என்னுடன் என்றும் உடன் இருந்து அருள்புரிய வேண்டும் என்று கட்டிவிட
வேண்டும். இதுதான் குதச்சுப் பிரித்து கட்டுதல் என்ற சடங்கின் முறையாகும்.
அகல் விளக்கு,
கைவிளக்கு விளக்கம்:-
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பது பழமொழி, 5 வயது சிறுமியான பெண்ணிற்கு
நல்லொழுக்கம், நற்பண்புகள், கல்வி,
அறிவு,
பொறுமை, தியாக உள்ளம், அன்புசார்ந்த மனம், அடக்கம்,
தெய்வவழிபாடு பெரியோர்களை மதிக்கும் பாங்கு இவையாவும் அமைய
வேண்டும். அதை சிறு வயதிலேயே கடைப்பிடித்து வளர்ந்து வருவாளானால் இல்லத்துக்கு
அரசியாக குடும்பத்தில் விளக்காக ஒளி வீசி என்றும் பிரகாசிக்க முடியும் என்பதற்காகவே
விளக்கு பூஜையும் செய்து வர வேண்டும்.
"இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது ஜோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நமச்சிவாயவே"
என்பது தேவாரம்.
அகல் விளக்கு சிவனின் வடிவாகும். சிவன் தலையில்
ஜடை முடியுடன் உடையவன்,
மின்னார்செஞ்சடை, ஜடாதரன் என்று
போற்றபடுகிறவன். அகல் விளக்கு திரியிடுகின்றோமோ அதுவே சிவனாகும். அகல் விளக்கிலே
பசுவின் நெய் ஊற்றி ஏற்றி வைத்தவுடன் சிவபெருமான் ஒளி வடிவிலே பிரகாசிக்கிறான்.
அகல் விளக்கு திரியிடும்போது 108 இழைகள் எடுத்து அதை மூன்று பாகமாகப் பிரித்து
ஜடைபோல் பின்னிப் போட்டு ஏற்ற வேண்டும் என்பது ஐதீகம். கைவிளக்கு அது சக்தியின்
வடிவமாகும். 54 இழைகள் நூலாக எடுத்து திரி போட்டு ஏற்ற வேண்டும். வீட்டிலுள்ள
அஞ்ஞானம், பேதமை, வறுமை,
நோய், மன
சஞ்சலங்கள் ஆகிய இருளை அகற்றி அம்மையே எனக்கு நல்வழி காட்டியருள வேண்டும்.
பெண் ஆனவள் கணவனுடன் இணைந்து சிவ சக்தியின் அம்சமாக ஒவ்வொரு இல்லத்திலும் விளங்க
வேண்டும். வாழ்வுக்கு அரசியாக
வாழ வேண்டும் என அருள் நோக்கத்தோடு குலப் பெண்கள் செய்து வர வேண்டும். எல்லா வளமும்,
நலமும் பெற்ற சீரோடும்,
சிறப்போடும் மங்கையர்க்கு அரசியாக எம்பெருமான் அருளால் என்றென்றும்
வாழ்வார்கள் என விளக்கிடு கலியாணத்தின் பெருமை குறிப்பதாக வரலாறு. 5 என்ற சொல்லிலேயே பஞ்சாட்சர மந்திரம்
ஆகிய நமசிவாய என்பதும் பொருந்தும். பஞ்ச பூதங்கள் 5 .
முக்கிய அதி தேவதைகள் 5 .
1 . சூரியன்,
2 . இந்திரன், 3
. பிரம்மா, 4 . விஷ்ணு, 5 . சிவம் ஆக இந்த தெய்வங்கள் தான்
முக்கியமாக போற்றி வணங்க வேண்டிய தெய்வங்கள்.
தம் குடும்பங்களில் சுபகாரிய நிகழ்ச்சிகளுக்கும் இந்த
தெய்வங்களுக்கும் பொங்கல் இட்டு படைக்கிறோம்.
5 பானைகள் 5 இலைகள் என்று நைவேத்தியங்கள்
படைக்கின்றோம். படைக்கும்
பொருட்களும் ஐந்து. 1 . சாதம், 2 . நெய்,
3 . வெல்லம்,
4 . பழம், 5 .
தேங்காய் என வரிசைப்படுத்தியுள்ளர்கள் நம் முன்னோர்கள்.
விளக்கிடு கல்யாணத்திற்கு செய்ய வேண்டிய சடங்கின் விளக்கம்.
தாய்வழிப்பாட்டனார் அல்லது தாய்மாமனார் வீட்டார் விளக்கிடு
கலியாணப் பெண் குழந்தைக்கு செய்ய வேண்டிய சீர்வரிசைகள் விபரம் பொன் பவள உருண்டைகள்
கோர்த்த தங்க சங்கலி. இது
நவதாலி என்பதாகும். அகல்
விளக்கு ஒன்றும், கைவிளக்கு
ஒன்றும் இரு விளக்குகளும் வைப்பததற்கு உரிய ஒரு தாம்பாளமும் கொடுக்க வேண்டும். இது
தவிர பொங்கல் வைப்பதற்கு ஏற்றார் போல் ஓர் சிறிய வெங்கலப்பானையும், வெங்கல அகப்பை (கரண்டி) ஒன்றும் கொடுக்க
வேண்டும். பெண்ணிற்கு விளக்கிடு
கல்யானத்தன்று அணிவதற்கு பட்டுப்பாவாடை,
சட்டை, தாவணி
இவையாவும் கொடுக்க வேண்டும். தைப்பொங்கல் அன்று ஒரு தாம்பாளத்தில் மஞ்சள், வெற்றிலை,
பாக்கு,
பழ வகைகள், மூன்று தேங்காய், சந்தனம், குங்குமம்,
விபூதி இரண்டு பூமாலைகள் சுருள் பணம் வைத்து அத்துடன் நவதாலியையும் வைத்து
தாய்வழிப்பாட்டனார் பெண்ணின் கைகளில் கொடுக்க வேண்டும்.
விளக்கு ஏற்றுவதற்கு உரிய நெய்யும், விளக்குகளுக்கு இரண்டு திரியும் கொடுக்க
வேண்டும். ஜடை போட்ட திரியை அகல் விளக்குக்கும் நூல் திரியை கைவிளக்குக்கும் போட்டு
நெய் விட்டு ஏற்ற வேண்டும்.
தை மாதம் முதல் நாள் முகூர்த்தம் குறித்த நேரத்தில் நடைபெறும்.
சூரியன் ஒளி வீசக்கூடிய முன் வாசலில் கிழக்கு முகமாக இரண்டு வாழை நுனி இலைகள் போட
வேண்டும். இலைகளின் மீது இரண்டு விளக்கு,
பசுஞ்சாணியில் இரட்டைப் பிள்ளையார் பிடித்து, நிறை நெல் நாழியும் வைக்க வேண்டும். இலையின் மீது வெற்றிலை, பாக்கு,
பழங்கள்,
தேங்காய் உடைத்து வைக்க வேண்டும்.
அச்சு வெல்லம்,
மஞ்சள்குலை,
கரும்பு, பனங்கிழங்கு இவையாவும்
வைக்க வேண்டும். விளக்கிடு கலியாணத்திற்கு ஐந்து (5 ) பானைகள் பொங்கல் இட்டு
விளக்குகள் முன்னால் வைக்க வேண்டும்.
4 பானை சாதமும், ஒரு பானை பாயாசமும் வைக்க வேண்டும்.
முகூர்த்தம் குறித்த நேரத்தில்,
பெண்ணிற்கு புதிய பாவாடை,
சட்டை, தாவணி, அணிவித்து கழுத்தில் இரண்டு மாலைகள்
அணிவித்து விளக்குகள் முன்னாள் நிற்க வைக்க வேண்டும்.
5 நுனி வாழைஇலைகள் எடுத்து விளக்குகள் முன்னாள் பரப்பி
இலைகளின் மேல் நீர் தெளித்து 4
பானைகளில் உள்ள சாதத்தையும் கரண்டியினால் எடுத்து வைத்து ஐந்தாவது பானையின்
பாயாசமும் 5 இலைகளிலும் படைத்து,
பின் நெய்,
தேங்காய்த்துண்டு, பழம், வெல்லம் இவையாவும் படைப்பில் போடவேண்டும்.
அதன்பின் பெண்ணின் தாயார், ஆச்சி
வந்துள்ள மற்ற வீட்டிலுள்ளவர்கள் தங்களுடைய அகல்,
கை விளக்குகளை ஏற்றிவிட்டு படைப்பு பூஜை செய்ய வேண்டும். பெண்ணிற்கு உரிய விளக்குகள் மாத்திரம்
ஏற்ற வேண்டாம். பூஜையினை தாய்வழிப் பாட்டனார் மனைவியோ (அம்மாச்சி அல்லது அத்தையோ)
செய்து, பெண்ணை விளக்குகளின்
பின்பக்கம் போடப்பட்ட மணமேடையில் கிழக்கு முகமாக உட்காரச் செய்ய
வேண்டும்.
அதன்பின்
தாய்வழிப்பாட்டனாரைஅல்லது தாய்வழிமாமனாரை அழைத்து மணமேடையில் அமரச் செய்து,
பெண்ணின் தகப்பனார், பாட்டனாருக்கு பன்னீர் தெளித்து சந்தனம் குங்குமம் கொடுத்து
கழுத்தில் இரண்டு பூமாலைகள் அணிவித்து மாமனாரைப் பெருமைப்படுத்த வேண்டும். அதன்பின்
பாட்டனார், பேத்தியாகிய பெண்ணின் கழுத்தில் நவதாலியைப் போடவேண்டும்.
தாய்வழிப்பாட்டனார் விபூதி பூசிய பின், பெண் தன் கையினால் அம்மாச்சி என்கிற அல்லது
மாமன் மனைவியாகிய அத்தையின் உதவியோடு அகல்
விளக்கையும்,கைவிளக்கையும்ஏற்றவேண்டும். இருவிளக்குகளையும் ஏற்றிய பின்
மணமேடையில் வைக்கப்பட்டுள்ள விளக்குகளையும், சூரிய பகவான் முதலிய தேவர்களுக்கு
படைக்கப்பட்ட படைப்புகளையும் மூன்று முறை வளம் வரவேண்டும். வந்துள்ள மற்ற
வீட்டிலுள்ள பெண்களும் தங்களுக்கு உரிய விளக்குகளை ஏற்கனவே ஏற்றப்பட்டவை கையில்
வைத்து பெண்ணோடு சேர்த்து மூன்று முறை சுற்றி வரவேண்டும்.
மூன்றாவது சுற்று முடிந்தபின் வீட்டிற்குள் சென்று வீட்டுத்
தெய்வங்கள் முன்பாக விளக்குகளை வைத்து தரையில் விழுந்து வணங்கி அருள் பெற
வேண்டும். அதன்பின் பால் பழம் கொடுத்து ஆரத்தி எடுக்க வேண்டும். அகல்
கைவிளக்குகளை மாலை நேரமும், மறுநாள் காலை நேரமும் ஆக மூன்று நேரம் ஏற்றி
வழிபடவேண்டும். விளக்கிற்கு நெய்தான் விட வேண்டும். மறுநாள் விளக்கு
ஏற்றும்பொழுது காலையில் வீட்டு வாசலில் கிழக்கு முகமாக வாழை இலைகள் இரண்டு போட்டு
ஒரு குத்துவிளக்கு, பிள்ளையார், நிறைநெல்நாழி, வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய்
உடைத்து வைக்க வேண்டும். பின் ஒரு பானை பொங்கலிட விட வேண்டும்.
விளக்கின் முன்னால் 5 இலைகள்போட்டு படையல் முன்பு செய்தது போல் இட்டு விளக்கிடு கல்யாணம் ஆனா பெண்ணின்
அகல் கை விளக்குகளை
வாசலில் கொண்டு வந்து படையல் முன்பாக ஏற்றி வைக்கவேண்டும். அதன் பின் பூஜை செய்து பெண்ணின்கையில் விளக்குகளை கொடுத்து குத்து விளக்கு, படையல் யாவற்றையும் சேர்த்து ஒரு முறையோ அல்லது
மூன்று முறையோ சுற்றி வீட்டிற்குள் தெய்வங்களின் முன்பாக வைத்து வணங்க வேண்டும்.
கார்காத்தார் குலச்சிறுமிகளுக்குத் தைத்திங்கள் தலைநாளில்
மங்கலக்குறியெனப் பொன்னும் பவளமும் கலந்த நவதாலியை தாய்வழித் தாத்தாவொஇ தாய் மாமனோ
அணிவிப்பபது மரபு.
நவ தாலி பவள மணிகள் 10ம் தங்க உருண்டை 9ம் சேர்த்து
கோர்த்திருக்கும். பவளம் சிவடிபெருமானின் அருள் வடிவை குறிக்கும் தங்கமணிகள்
ஒன்பதும் நவசக்தி நாயகியின் அம்சமான பராசக்தியாகிய அம்பிகையின் அருள் வடிவம் ஆகும்.
9 நாயகிகளுக்கு 9 நாயகர்கள் வீதமமும்இ 10வது பவளம் பிரதான ருத்திரமுர்தியான
சிவபெருமானை குறிக்கும். 19 மணிகளும் சேர்ந்து சிவசக்தி அருள்வடிவாகும். தை பொங்கல்
நன்னாளில் சூரிய பகவான் முன்பு கழுத்தில் அணிவிக்கப்படுகிறது. எந்த தீய
சக்திகளாலும் தீங்கு ஏற்படாமல் பாதுகாப்பார்கள் என்பது ஐதீகம்.
அகல்விளக்கு (சூரியன்) கைவிளக்கு (சந்திரன்) என்ற இரு விளக்குகளை
அதற்கென தனித்தனியாகத் தயாரிக்கப்பட்ட திரிகளை நெய்விட்டு தீபம் ஏற்றி பெண்
குழந்தை இறைவர்pபாடு டிசய்ய வெண்டும். விளக்கினை ஏற்றி சிவ வழிபாடு செய்தல்
இவ்விழவின் கருத்தாகும்.
பெண் குழந்தை பூப்பெய்தியவுடன் செய்யும் சடங்கு விபரம்
பெண் குழந்தை பூப்பெய்திய ஏழாம் நாள் நம் முன்னோர்கள் சடங்கு
விசேடம் நடத்தி வந்தார்கள்.
அத்தோடு ஐந்தாம் நாள் தாய்மாமன் வீட்டினர் (அம்மான் வீட்டினர்) வந்து அவர்கள்
செலவில் உறவினரை அழைத்து விருந்து வைப்பார்கள். அன்று சர்க்கரை பொங்கல் களி, புட்டு,
வடை செய்து மற்ற உறவினர்கள் வீட்டிற்கும் கொடுப்பார்கள்.
ஏழாம் நாள் சடங்கு பூப்பெய்திய பெண் வீட்டின் செலவில் நடக்கும். அன்று
தாய்வளிப்பாட்டனார் அல்லது தாய்மாமன் பெண்ணிற்கு செய்ய வேண்டிய சீர் வரிசைகளாவது: -
பெண்ணிற்கு பட்டுப்புடவை,
சட்டை, முகம்
பார்க்கும் கண்ணாடி, சீப்பு, சோப்பு, பவுடர், சாந்து
(பொட்டிற்குரியது), குங்குமம்
நிறைந்த சிமிழ், வாசனைத்தைலம்
ஆகியவற்றை ஒரு தாம்பாளத்திலும்,
ஒரு குலை வாழைப்பழம் தனியாகவும்,
இனிப்பு 2 வது தாம்பாளத்திலும்
கற்கண்டு வெற்றிலை,
பாக்கு, ஒரு
சீப்பு வாழைப்பழம், மஞ்சள் தடவிய
மூன்று தேங்காய்கள், பெண்
கழுத்திற்குரிய (மல்லிகை அல்லது பிச்சிபூ) பூ ஆரங்கள் இரண்டு ஆகியவற்றை 3 வது தாம்பாளத்திலும் வைத்து பெண்ணிற்கு
தாய்மாமன் 7 ம் நாள் சடங்கு அன்று தருவார்.
பூப்பெய்திய பெண் வீட்டார் கிழக்கு முகமாக இரண்டு வாழை இலைகள்
இட்டு அவற்றின் மேல் இரண்டு திருவிளக்குகள் பசுஞ்சாணி இரட்டைப் பிள்ளையார், நிறைநெல்நாழி இவைகள் வைத்தல் வேண்டும்.
மேலும் வெற்றிலை, பாக்கு, ஒரு சீப்பு வாழைப்பழம், தேங்காய் உடைத்து அதன் இரு மூடிகல்
ஆகியவற்றையும் வைக்க வேண்டும்.
இந்த விளக்குகள் முன்பாகவே தாய்வழிப்பட்டனார் கொடுக்கும் 3 தாம்பாளங்களையும். ஒரு
குலை வாழைப்பழத்தையும் வைத்தல் வேண்டும்.
பெண்ணை (பூப்பெய்தியவள்) அழைத்து வந்து விளக்குகள் முன்பு கிழக்கு
முகமாக உட்காரவைத்து தாய்வழிப்பாட்டனார் அல்லது தாய்மாமன் கொண்டு வந்த (ஏற்கனவே கூறியுள்ள பொருட்களை) சீர்வரிசைகளை நீர்சுற்றி
நைவேத்தியம் செய்து கற்பூரம் காண்பித்து மூத்த சுமங்கலியானவர் பூஜை செய்ய
வேண்டும். பின்பு பெண்ணின் கையில், தாய்வழிப்பாட்டனார் தான் கொண்டு வந்த புடவை,
சட்டை, முதலியவை வைத்துள்ள தாம்பாளத்தை தரவேண்டும். பெண் புதுபுடவையினைக் கட்டி
வந்து விளக்குகள் முன்னால் உட்கார வேண்டும்.
பெண்ணின் அம்மாச்சியோ அல்லது தாய்மாமன் மனைவியான அத்தையோ
பெண்ணிற்கு பன்னீர் தெளித்து, கைகளிலும், கழுத்திலும் சந்தனம் பூசி, நெற்றியில்
குங்குமம் இட்டு கழுத்தில், கொண்டுவந்த இரண்டு பூமாலைகளை போட வேண்டும்.
பெண் வீட்டில் பச்சரிசி மாவினால் தயாரித்த 5 அடைகள், சிறிய விளக்கு
ஒன்று, சிறிய நிறைநாழி ஒன்று. சிறிய இரண்டு கும்பாக்கள், ஒன்றை பச்சரிசி மாவும்
வெல்லமும் சேர்த்து செய்த களியும், மற்றொரு கும்பாவில் உளுத்தம் பருப்பும்,
புழங்கல் அரிசியும் கலந்து செய்த பருப்பு சோறும் வைத்து இருக்க வேண்டும்.
பெண்ணின் உச்சஞ் தலையில் ஒரு அடை, வலது தோளின் மேல் ஒரு அடை, இடது
தோளில் ஒரு அடை வலது தொடையில் ஒரு அடை, இடது தொடையில் ஒரு அடை வைக்க வேண்டும்.
ஏற்றி இறக்குதல்:
பெண்ணிற்கு முன்னால் தாய்வழியைச் சார்ந்த அம்மாச்சியோ அல்லது
தாய்மாமன் மனைவியோ நிற்கவேண்டும்பெண்ணிற்கு பின்னால் தந்தை வழி அத்தை நிற்க
வேண்டும். பெண்ணின் முன்னால் நிற்பவர் தனது
வலது கையால் விளக்கையும், இடதுகையால் நிறைநாழியையும் பிடித்து இருகைகளையும் குறுக்காக (கிராஸ் ஆக) வைத்துக் கொண்டு தொடைப்பகுதியிளிருந்து மேலாக
தலை உச்சிப் பகுதி வரை ஏற்றிக்கொண்டு வரவேண்டும். பெண்ணின் பின்னால் இருப்பவர்
தனது இருகைகளையும் குறுக்காக (கிராஸ் ஆக) வைத்துக்கொண்டு விளக்கையும்,
நிறைநாழியையும் பெற்று (வல கையில் விளக்கினையும், இடது கையில் நிறைநாழியையும்
வைத்துக் கொண்டு) பெண்ணின் உச்சியிலிருந்து தொடைப்பகுதிக்கு இறக்கி கொண்டு வர
வேண்டும். இதேபோன்று இவர்கள் பருப்பு சோறும், களியும் வைத்துள்ள இரண்டு
கும்பாக்களையும் முன் நிற்பவர் ஏற்றி விடவும், பின்னால் நிற்பவர் இறக்கி விடவும்
செய்ய வேண்டும். இதற்கு பிறகு பன்னீர் செம்பை ஒரு கையிலும், சந்தனக் கும்பா ஒரு
கையிலுமாக இருகைகளையும் ஏற்கனவே செய்தது போல் குறுக்காக வைத்து முன்பு செய்தது போல்
முன்னால் உள்ளவர் ஏற்றிவிடவும் பின்னால் உள்ளவர் இறக்கி விடவும் வேண்டும்.
முன்னால் நிற்பவர் நெற்பொரியை கையில் வைத்து பெண்ணின் தலையை சுற்றி
உச்சந்தலையில் வைத்த அடையை எடுத்து அடையையும் பொறியையும் பெண்ணின் முன்பாக போட
வேண்டும். இதே போன்று பொறி எடுத்து தலையை சுற்றி வலது தோல் மேல் உள்ள அடையை
எடுத்து அடையையும் பொறியையும் வலது பக்கத்தில் போட வேண்டும். இதே முறையில் இடது
தோளிலுள்ள அடையை எடுத்து இடது பக்கம் போட வேண்டும். இதேபோன்று கையில் பொறி எடுத்து
தலையினை சுற்றி வலது, இடது தொடைகளில் உள்ள அடைகளையும் வலது பக்கமாகவும், இடது
பக்கமாகவும் அகற்றி போட வேண்டும்.
அடுத்த பெண்ணிற்கு பால், பழம் கொடுத்து ஆரத்தி சுற்றி எடுக்க
வேண்டும்.பிறகு வந்துள்ள பெரியவர்கள் விபூதி பூசி பெண்ணை ஆசீர்வாதம் செய்வார்கள்.