முன்னுரை
கார்குல மக்களின் இல்லங்களில் திருமணம் தெய்வ வழிபாட்டுடன் கூடிய
சடங்குகளுடன் நடைபெறும்.
திருமணம் நிகழ்முறை, செய்யப்படும் சடங்குகள் வரிசையாக சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது.
முன்னர் திருமணம் நான்கு நாள்
விழாவாகக் கொண்டாடப்பட்டது. தற்காலத்து மணமக்கள் மற்றும் உற்றார் உறவினர்
வாழ்வியல் சூழ்நிலை கருதி இரண்டு நாள் விழாவாகக் கொண்டாடப்படுகின்றது.
இதை அனைத்து கார்குலத்தாரும் பின்பற்றி, வாழ்வாங்கு வாழ்ந்திட
வாழ்த்துகிறேன்.
ம. சத்தியபால்.
பொதுச் செயலாளர், மாநில கார்காத்த வேளாளர் சங்கம்.
கார்குல திருமண நிகழ்வு முறை – மாயவரம்
திருமணத்திற்கு முதல் நாள் நிகழ்வுகள்
மணமகன் அழைப்பு
பெரும்பாலும் மணமகள் இல்லத்தில் திருமணம் நிகழ்வதால் முதல் நாள் மாலை மாப்பிள்ளை
அழைப்பு நிகழ்தல் வேண்டும். மணமகளின் தந்தை மணமகனுக்குச் சந்தனம், கல்கண்டு வழங்கி மலை அணிவித்து அழைத்து வருதல்
வேண்டும். மணமகன் திருமண மண்டபத்து வாயுலுக்கு வந்தவுடன் மணமகள் சென்று மணமகனுக்கு
மாலை அணிவித்து அழைத்து வருதல் வேண்டும். மணமகனை இருக்கையுல்
அமரச் செய்து பால், பழம் கொடுத்து சிறப்பிக்க வேண்டும்.
நாள் விருந்து
தற்காலத்தில் நாள்விருந்து என்ற சடங்கு திருமண மண்டபதிலேயே
மாபிள்ளையை அழைத்தற்குப் பின் மணமகள் மணமகன்
இருவருக்கும் நடைபெறுகின்றது.
நிச்சயத் தாம்பூலம்
பின்னர் நிச்சயத்தாம்பூலம் நடைபெறும். இருவீட்டாரும் சுற்றம் சூழ மங்கலவாத்தியம்
முழங்க, மண ஆசிரியர் திருமுறை, மற்றும் மறை ஓத தாம்பூலத் தட்டை மாற்றிக் கொள்ள
வேண்டும்.
திருமணத்தை உறுதி செய்யும் வகையுல் மணமகனின் தந்தை
மணமகளுக்கு மோதிரம் மற்றும் அணிகலன்கள் அணிவித்தல்
வேண்டும்,
திருமண நாள் நிகழ்வுகள்
மங்கலப்பெண்டிர் ஐந்து முக திருவிளக்கு ஏற்றி வைத்தல் வேண்டும்.
தொடர்ந்து குடவிளக்கு எனப்படும் குலவிளக்கு ஏற்றி வைத்து
இறைவழிபாட்டுடன் திருமண நிகழ்வுகள் தொடங்குதல் வேண்டும்.
மணமகன் வருகை
மணமகனை மணமேடைக்கு அழைத்து வருதல் வேண்டும். மணமகன் பிள்ளையாரை வழிபடுதல்.
அரசாணிக்கால் வழிப்பாடு
மங்கலப்பெண்டிர் ஐவரைத் துணை கொண்டு அரசாணிக்காலுக்குச் சந்தனம் பூசி, பொட்டிட்டு,
மலர்சூடி, சிவப்பு நிற பட்டு சார்த்தி, மஞ்சள் காப்பு நாண்
கட்டி மங்கல இசை முழங்க வழிபடுதல் வேண்டும்.
சீர்காக்கும் மாலை அணிவித்தல்
மணமகனின் தாய்மாமன் இறைவனை வணங்கி சீர்காக்கும்
மாலைஅணிவித்தல்வேண்டும்.தொடர்ந்து உறவினர்கள் இறைவனை
வணங்கிசீர்காக்கும் மாலையை அணிவித்தல் வேண்டும். மண ஆசிரியர்
வாழ்த்துதலும் மனமகனுக்குரிய மன ஆடையை அளித்தலும் நிகழும்.
மணமகள் வருகை மணமகள் நிச்சயத்தாம்பூல புடவை அணிந்து
மணமேடைக்கு வருதல் வேண்டும். விநாயகர் வழிபாடு, தாய்மாமன்
மணமகளுக்குச் சீர்காக்கும் மலை அணிவித்தல்,தொடர்ந்து உறவினர்கள்
இறைவனைவணங்கி சீர்காக்கும் மாலை அணிவித்தல். மணமகளுக்குரிய மண ஆடையை
பெற்றோர்கள் வாழ்த்தி வழங்குதல் வேண்டும்.
பெற்றோர் வழிபாடு
மணமகன் திருமண ஆடை அணிந்து மணமேடைக்கு வருதல் வேண்டும். மணமகனின் தந்தை
மங்கலக்காப்பை மணமகனின் வலக்கரத்தில் அணிவிக்க வேண்டும். மணமகனின்
தாய் தந்தையரை மணமேடைக்கு அழியிது, அருகில் நிற்கச் செய்து மணமகனைக் கொண்டு
அவர்கள் பாதங்களில் நீர், சந்தனம், மஞ்சள், குங்குமம், மலர் சார்த்தி வணங்கிடச்
செய்தல் வேண்டும். மணப்பொங்கல் படைத்தல் வேண்டும்.
மணமகளை நிறைநாழி கொடுத்து அழைத்தல்
மணமகள் திருமண ஆடை அணிந்து மண்டபத்தின் வாயிலில் நிற்க,
மணமகனின் தாய் மற்றும் சகோதரிகள் சென்று நிறைநாழி கொடுத்து மணமகளை
மணமேடைக்கு அழைத்து வருதல் வேண்டும்.
மணமகள் மணமகனுக்கும்,மணமகன் மணமகளுக்கும் திருமணமாலை
அணிவித்தல் வேண்டும். மணமகளின் இடக்கையில் மணமகன் மங்கலக்காப்பை
அணிவிக்க வேண்டும்.
மணமகள்
மணப்பொங்கல்
படைத்த பின்னர்
மணமகளின் தாய் தந்தையருக்குப் பாத பூஜை செய்து வணங்கல் வேண்டும்.
மகட்கொடை
மணமகளின் பெற்றோர்
மணமகளை
மணமகனின்
பெற்றோர் வாயிலாக மணமகனுக்கு
வாழ்க்கைத் துணைவியாக
மனம் உவந்து அளித்தல், அழல் ஓம்பல், மணமக்களின் பெற்றோர்கள்
தங்களுக்குள் ஆடைகளை மாற்றிக் கொண்டு சம்பந்தி ஆகவேண்டும்.
திருமாங்கல்யம் அணிவித்தல்
திருமறைகளும், திருமுறைகளும் ஓத யாகம் வளர்த்து மங்கள இசை
முழங்க மணமக்களின்பெற்றோர்கள் இறையருளை வேண்டி வாழ்த்தி மணமகன்
கையில் திருமாங்கல்யத்தை
அளிக்க, மணமகன் மணமகளின் கழுத்தில் அணிவித்தல்
வேண்டும்.
முப்பெருந்தெய்வங்களை வேண்டி மூன்று முடிச்சுகள் இடச்செய்து முடிச்சில்
மங்கள் கும்குமம் சார்த்தச் செய்ய வேண்டும். மணமகன் மணமகள் நெற்றியில் திலகம் அணிவித்தல்
வேண்டும்.
அனைவருக்கும் பூ,சந்தனம்,கற்கண்டு வழங்கி சிறப்பிக்க வேண்டும்.
மணமக்கள் மாலை மாற்றி, மும்முறை ஹோம தீயை வலம் வருதல்
வேண்டும்.
மணமகள் அம்மி மிதித்தல்,அருந்ததி பார்த்தல், பின்பு மெட்டி அணிவித்தல்,
மணமகளுக்கு தாய்மாமன் பட்டம் கட்டுதல், மாமனார் மோதிரம், மைத்துனர் மோதிரம்
அணிவித்தல் முதலிய நிகைழ்வுகள் நடைபெற்ற பின்னர்
மங்கலப் பெண்டிர் ஆலத்தி எடுக்க வேண்டும்.
நாலாம் நீர்
நெல் மேல் போடப் பட்ட வாழை இலை மேல் பெண்ணை நிற்க
வைத்து மாமியார், நாத்தானார், பெரிய மாமியார், சிறிய மாமியார்
பட்டம் கட்டுவர்.
தேங்காயை வலம் இடமாக பெண்ணின்
தலைக்கு மேல் மும்முறை சுற்றுவர். மங்கலக் காப்பு அவிழ்த்தல், மும்முறை ஓமத்தீயையும்,
பந்தல் முட்டியையும் வலம் வருதல். பின்பு குழமுடைப்
பானையில் இருந்து மணமக்கள் ஏடு, எழுத்தாணி, பிள்ளையார், பாலடை எடுத்தல். பின்பு
பாலிகை விடுதல், மாப்பிள்ளைக்கு அதிரசம் போடுதல் முதலிய
நிகழ்வுகளுடன் திருமணம் இனிதே நிறைவேறும்.